/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரயில்வே மேம்பால பணி இடையூறு கட்டடம் அகற்றம்
/
ரயில்வே மேம்பால பணி இடையூறு கட்டடம் அகற்றம்
ADDED : நவ 06, 2025 03:20 AM

வேப்பம்பட்டு: வேப்பம்பட்டில் ரயில்வே மேம்பால இணைப்பு சாலை பணிக்கு இடையூறாக உள்ள கட்டடங்களை, நேற்று நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
சென்னை - அரக்கோணம் ரயில்வே மார்க்கத்தில், கடவுப்பாதை எண்: 14ல் உள்ள வேப்பம்பட்டு ரயில் நிலையத்தில், 2009ம் ஆண்டில் 29.5 கோடி ரூபாயியில் மேம்பாலம் அமைக்கும் பணியை ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டது.
கடந்த 2012-ம் ஆண்டு நெடுஞ்சாலைத் துறையால் துவங்கப்பட்ட பணிகள், பகுதிமக்கள் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கால் தடைபட்டது. கடந்த 2022 டிசம்பர் மாதம் வழக்கு வாபஸ் பெறப்பட்டு, இடைக்கால தடை விலக்கி கொள்ளப்பட்டும், பணிகள் துவங்கப்படாமல் இருந்தன.
தற்போது திருத்தியமைக்கப்பட்ட திட்டத்தின் படி, 44 கோடி ரூபாயில் பணி நடந்து வருகிறது. இந்த ரயில்வே மேம்பால பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று மேம்பாலம் அமைந்துள்ள பகுதியில், ரயில் நிலையத்திற்கு வரும் இணைப்பு சாலையில், 19 வணிக நிறுவனங்களின் முன்புறத்தை அகற்றும் பணி நேற்று நடந்தது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
வேப்பம்பட்டு ரயில்வே மேம்பால பணிகள் நிறைவடைந்து, டிசம்பர் மாத இறுதிக்குள் பயன்பாட்டிற்கு வருமென, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் மருதாச்சலம் தெரிவித்தார்.

