/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஒருமையில் பேசிய மேலாளர் பஸ் ஓட்டுநர் தீக்குளிக்க முயற்சி
/
ஒருமையில் பேசிய மேலாளர் பஸ் ஓட்டுநர் தீக்குளிக்க முயற்சி
ஒருமையில் பேசிய மேலாளர் பஸ் ஓட்டுநர் தீக்குளிக்க முயற்சி
ஒருமையில் பேசிய மேலாளர் பஸ் ஓட்டுநர் தீக்குளிக்க முயற்சி
ADDED : நவ 06, 2025 03:21 AM

பொதட்டூர்பேட்டை:: பணிமனை மேலாளர் ஒருமையில் திட்டியதால் மனமுடைந்த அரசு பேருந்து ஓட்டுநர் தீக்குளிக்க முயன்றார். அவரை சக ஊழியர்கள் மீட்டனர்.
திருத்தணி அடுத்த கே.ஜி.கண்டிகையைச் சேர்ந்தவர் ஹேமாத்ரி, 32. பொதட்டூர்பேட்டை பணிமனையில், தடம் எண்: 'டி 27ஏ' அரசு பேருந்தின் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.
இவரிடம், பொதட்டூர்பேட்டை பணிமனை மேலாளர் (பொறுப்பு) மேகநாதன் நேற்று , 'டீசல் சிக்கனத்தை ஏன் கடைப்பிடிக்கவில்லை' எனக் கேட்டுள்ளார். இதனால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேகநாதன், ஹேமாத்ரியை ஒருமையில் பேசியதாகவும் கூறப்படுகிறது.
இதனால், மனவேதனை அடைந்த ஹேமாத்ரி, நேற்று பொதட்டூர்பேட்டை பேருந்து நிலையத்தில் பயணியரை இறக்கி விட்டு, பணிமனைக்கு பேருந்தை ஓட்டி வந்துள்ளார். பின், அங்கிருந்த ஒரு இருசக்கர வாகனத்தில் இருந்து பெட்ரோலை எடுத்து, தன் மீது ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார்.
அதை கண்டு அதிர்ச்சியடைந்த சக ஓட்டுநர்கள் மற்றும் பணிமனை ஊழியர்கள், அவரை தடுத்து நிறுத்தினர். பின், ஹேமாத்ரியை சமரசம் செய்து அறிவுறுத்தினர். இதுதொடர்பாக, போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

