ADDED : பிப் 13, 2024 06:22 AM
கடம்பத்துார்: கடம்பத்துார் ஊராட்சி வெண்மனம்புதுார் ஊராட்சி ஒன்றிய அரசு உயர்நிலைப் பள்ளியில், தலைமையாசிரியர் ராஜா முன்னிலையில் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்செல்வி தலைமையில், 2023 - 24ம் ஆண்டிற்கான பள்ளி ஆண்டு விழா நடந்தது.
பள்ளியின் ஆண்டறிக்கையை ஆசிரியர்கள், பத்மாவதி, பாண்டியன் வாசித்தனர்.
ஆண்டு விழாவை முன்னிட்டு பள்ளியில் நடந்த நடனம், நாடகம், பேச்சு, கவிதை மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியர்களுக்கும் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.
விழாவில் வேலம்மாள் பதின்நிறை பள்ளி தமிழாசிரியர் மற்றும் எழுத்தாளர் காந்திபாலா, மதுரவாயல் எம்.ஆர்.பள்ளியின் ஆசிரியர் கவிதா மற்றும் பள்ளி மேலாண்மை குழுவினர், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் வார்டு உறுப்பினர்கள், மாணவர்களின் பெற்றோர் பங்கேற்றனர்.