/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சுகாதார ஒப்பந்த பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு
/
சுகாதார ஒப்பந்த பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு
ADDED : பிப் 16, 2025 04:00 AM
திருவள்ளூர்:பொது சுகாதார துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்ட நலவாழ்வு சங்கம் வாயிலாக, பல் மருத்துவர், 'டேட்டா' மேலாளர், லேப் உதவியாளர், ஓட்டுநர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக பணி நியமனம் செய்யப்பட உள்ளது. இப்பணியிடங்களுக்கான விண்ணப்பத்தினை https//tiruvallur.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, சுய சான்றொப்பமிட்ட சான்றிதழ்களுடன், வரும் 28ம் தேதிக்குள் செயற் செயலர், மாவட்ட நலவாழ்வு சங்கம், மாவட்ட சுகாதார அலுவலர், திருவள்ளூர் அலுவலகத்திற்கு நேரடியாகவோ அல்லது அஞ்சல் வாயிலாகவோ அனுப்பி வைக்கவும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.