/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அனுமதியில்லாமல் பட்டாசு கடையில் வெடி பதுக்கியவர் கைது
/
அனுமதியில்லாமல் பட்டாசு கடையில் வெடி பதுக்கியவர் கைது
அனுமதியில்லாமல் பட்டாசு கடையில் வெடி பதுக்கியவர் கைது
அனுமதியில்லாமல் பட்டாசு கடையில் வெடி பதுக்கியவர் கைது
ADDED : அக் 18, 2024 09:28 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு அடுத்த குமாரராஜபேட்டை அருகே, தற்காலிக பட்டாசு கடை செயல்பட்டு வருகிறது. பள்ளிப்பட்டு நகரை சேர்ந்த முஸ்தபா, 45, என்பவர் நடத்தி வருகிறார்.
கடையில் திருத்தணி டி.எஸ்.பி., கந்தன் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அனுமதியில்லாத வெடிகள், 30 பெட்டிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன.
இதையடுத்து, முஸ்தபாவை கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
கடந்த 2009ல், தீபாவளி பண்டிகையின் போது, பள்ளிப்பட்டில், அரிசி ஆலை ஒன்றில் செயல்பட்டு வந்த பட்டாசு கடையில் விபத்து ஏற்பட்டது. இதில், 32 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.