/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூர் வரும் சட்டசபை கணக்கீட்டு குழு
/
திருவள்ளூர் வரும் சட்டசபை கணக்கீட்டு குழு
ADDED : ஜூன் 16, 2025 11:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர், திருவள்ளூர் மாவட்டத்தில், தமிழக சட்டசபை கணக்கீட்டு குழு நாளை வருகிறது.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்திற்கு, 2024 - -26ம் ஆண்டுக்கான சட்டசபை பொதுக் கணக்குக் குழு, அதன் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில், நாளை ஆய்வு மேற்கொள்ள உள்ளது.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்த பின், பிற்பகலில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் ஆய்வு கூட்டம் நடக்க உள்ளது.
கருத்துருக்களில் உள்ள துறை அலுவலர்கள், தங்களுக்குரிய பதிவேடுகளை தயாராக வைத்திருக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.