/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஊத்துக்கோட்டை பணிமனையில் தொ.மு.ச., நிர்வாகிகள் விலகல்
/
ஊத்துக்கோட்டை பணிமனையில் தொ.மு.ச., நிர்வாகிகள் விலகல்
ஊத்துக்கோட்டை பணிமனையில் தொ.மு.ச., நிர்வாகிகள் விலகல்
ஊத்துக்கோட்டை பணிமனையில் தொ.மு.ச., நிர்வாகிகள் விலகல்
ADDED : மார் 12, 2024 08:40 PM
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அரசு பஸ் பணிமனையில் 200க்கும் மேற்பட்ட ஓட்டுனர்கள், நடத்துனர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இதில், தி.மு.க., சார்பில் இயங்கி வரும், தொ.மு.ச., தொழிற்சங்கத்தில், 150க்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
இதில் 40க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள், அதிருப்தி அடைந்து நேற்று தமிழ்நாடு மனித உரிமைகள் கழக தொழிற்சங்க பேரவை என்ற அமைப்பில் இணைத்துக் கொண்டனர்.
இதற்கான விழா நேற்று பணிமனை முன் நடந்தது. நிகழ்ச்சியில் சுப்பிரமணி, பாஸ்கர், ஜோதி ஆகியோர் தலைமையில், தொ.மு.ச.,வில் இருந்து விலகி, 40க்கும் மேற்பட்டோர் மனித உரிமைகள் கழக சங்கத்தில் இணைந்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:
கடந்த, 20 ஆண்டுகளுக்கு மேலாக தி.மு.க., தொழிற்சங்கத்தில் உறுப்பினராக உள்ளோம். எங்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமைகள் கூட பணிமனையில் கிடைக்கவில்லை.
இதனால் அதில் இருந்து விலகி, புதிய அமைப்பில் எங்களை இணைத்துக் கொண்டோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
விரைவில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆளுங்கட்சி தொழிற்சங்கத்தில் இருந்து உறுப்பினர்கள் விலகி மாற்று அமைப்பில் சேரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

