ADDED : செப் 29, 2024 12:53 AM

திருத்தணி:திருத்தணி நகராட்சி நிர்வாகம் சார்பில், துாய்மையே சேவை என்பது குறித்து துப்புரவு பணியாளர்கள், தனியார் செவிலியர் கல்லுாரி மாணவியர் ஆகியோரின் விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது.
இதில் திருத்தணி நகராட்சி தலைவர் சரஸ்வதி, ஆணையர் அருள் ஆகியோர் பங்கேற்று பேரணியை துவக்கி வைத்தனர்.
பேரணி நகராட்சி அலுவலகத்தில் துவங்கி, ம.பொ.சி.சாலை, அக்கைய்யநாயுடு சாலை, கடப்பா டிரங்க் ரோடு போன்ற சாலைகள் வழியாக மீண்டும் நகராட்சிக்கு வந்தடைந்தது.
இதில், 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, நகரத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும், பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும், துாய்மையே நம் சேவை போன்ற பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் கோஷமிட்டவாறு ஊர்வலம் சென்றனர்.
நிகழ்ச்சியில், நகராட்சி துப்புரவு ஆய்வாளர் ரவிச்சந்திரன், நகராட்சி கவுன்சிலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.