/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குளத்தில் தவறி விழுந்து பெண் குழந்தை பலி
/
குளத்தில் தவறி விழுந்து பெண் குழந்தை பலி
ADDED : செப் 03, 2025 01:35 AM
மீஞ்சூர்:வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த, இரண்டு வயது பெண் குழந்தை, குளத்தில் தவறி விழுந்து இறந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
மீஞ்சூர் அடுத்த நாலுார் கம்மவார்பாளையம் கிராமத்தை சேர்ந்த யுகேந்திரன் மகள் ராஷ்மிகா, 2, அதே கிராமத்தை சேர்ந்த மாதேஷ் மகள் வானதி, 2, ஆகியோர் நேற்று, வீட்டின் அருகில் உள்ள குளக்கரை பகுதியில் விளையாடிக்கொண்டிருந்தனர்.
அப்போது இரு குழந்தைகளும் குளத்தில் தவறி விழுந்தன. அருகில் இருந்தவர்கள் உடனடியாக குழந்தைகளை மீட்டு, மீஞ்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றபோது, ராஷ்மிகா இறந்து விட்டதாக மருத்துவமனையில் தெரிவிக்கப்பட்டது.
வானதிக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தகவல் அறிந்த மீஞ்சூர் போலீசார் இறந்த குழந்தையின் உடலை மீட்டு, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.