/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வங்கி ஊழியர் மயங்கி விழுந்து பலி
/
வங்கி ஊழியர் மயங்கி விழுந்து பலி
ADDED : டிச 15, 2024 10:53 PM
திருவள்ளூர்:திருவாலங்காடு அருகே உள்ள சின்னம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் விஜய் அமிர்தராஜ், 41; 'இன்டஸ் இன்ட்' என்ற தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு மனைவி சுதா, 37, இரு குழந்தைகளும் உள்ளனர்.
இவர் பணி நிமித்தமாகல திருவள்ளூர், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய பகுதிகளுக்கு சென்று வருவது வழக்கம். இவர்ல நேற்று முன்தினம் மதியம், பணி நிமித்தமாக வீட்டிலிருந்து புறப்பட்டவர் புட்லுார் அம்மன் கோவிலுக்கு சென்று விட்டு பின், ஆட்டோவில் புட்லுார் ராமாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே வந்துள்ளார். பின், அப்பகுதியில் மயங்கி கிடந்துள்ளார்.
இதைக் கண்ட அப்பகுதிவாசிகள் அவரை மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் இறந்து விட்டதாக மொபைல்போன் வாயிலாக அரசு மருத்துவர் சுதாவிற்கு தகவல் அளித்தனர்.
இதுகுறித்து, சுதா அளித்த புகாரையடுத்து, திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.