/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரூ.49 ஆயிரம் உரியவரிடம் ஒப்படைப்பு பெண்ணின் நேர்மையை பாராட்டிய வங்கி
/
ரூ.49 ஆயிரம் உரியவரிடம் ஒப்படைப்பு பெண்ணின் நேர்மையை பாராட்டிய வங்கி
ரூ.49 ஆயிரம் உரியவரிடம் ஒப்படைப்பு பெண்ணின் நேர்மையை பாராட்டிய வங்கி
ரூ.49 ஆயிரம் உரியவரிடம் ஒப்படைப்பு பெண்ணின் நேர்மையை பாராட்டிய வங்கி
ADDED : நவ 26, 2024 05:02 AM

கும்மிடிப்பூண்டி : கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் அழகு நிலையம்நடத்தி வருபவர் துர்கா, 28. நேற்று, கும்மிடிப்பூண்டிஎச்.டி.எப்.சி., வங்கி கிளைமுகப்பில் உள்ள, அதன் ஏ.டி.எம்., மையத்தில், அவரது கணக்கில், 6,000 ரூபாய் பணம் செலுத்த சென்றார். அப்போது, ஏ.டி.எம்., இயந்திரத்தில், பணம் வைக்கும் இடத்தில், 49,000 பணம்இருந்தது.
துர்கா, அந்த பணத்தை எடுத்துக்கொண்டு, வங்கி கிளை மேலாளர் ரமன்குமாரிடம் விபரத்தை தெரிவித்து பணத்தை ஒப்படைத்தார். அவருக்கு முன்னால், ஏ.டி.எம்.,யை பயன்படுத்தியது யார் என கண்காணிப்பு கேமராவில், வங்கி மேலாளர் பார்த்தார்.
அதே கிளையில் நடப்பு கணக்கு வைத்திருக்கும் அஜித், 32, என்பது தெரிந்தது.
உடனடியாக அவரை தொடர்பு கொண்டு, வங்கி மேலாளர் கேட்டபோது, தன் கணக்கில், 49,000 ரூபாய் செலுத்தியதாகவும், கணக்கில் பணம் ஏறிவிட்டதாகவும் நினைத்து, ஏ.டி.எம்.,ல் இருந்து வெளியேறியதாகவும் அஜித்தெரிவித்தார்.
அவரை வரவழைத்த வங்கி மேலாளர், துர்கா முன்னிலையில் பணத்தை அவரிடம் ஒப்படைத்தார். துர்காவின் செயலை, அஜித், வங்கி மேலாளர்மற்றும் ஊழியர்கள்பாராட்டினர்.
ரூ.28 ஆயிரம் அபேஸ்
திருத்தணி வாசுதேவன்தெருவைச் சேர்ந்தவர் புருஷோத்தமன் மனைவி சரிதா, 43. இவர் நேற்று மாலை திருத்தணிம.பொ.சி.சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம். மையத்திற்கு வந்தார்.
அங்கிருந்த ஒரு பெரியவரிடம் சரிதா தன் ஏ.டி.எம்., கார்டை கொடுத்து பணத்தை எடுத்து தருமாறு கூறினார். பெரியவரும் கார்டை இயந்திரத்தில் செலுத்திய பின் பணம் வரவில்லை என கூறி கார்டை திருப்பி கொடுத்தார்.
அருகிலிருந்த மர்ம நபர் ஒருவர், சரிதாவிடம்தான் பணத்தை எடுத்துதருவதாக கூறி, கார்டு பெற்று இயந்திரத்தில் போட்டு உடனே எடுத்து விட்டார்.
ஏ.டி.எம்-ல் பணம் வரவில்லை என கூறி மர்ம நபர், வேறு கார்டை மாற்றி கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றார்.
சிறிது நேரத்தில் சித்துார் சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில், மூன்று முறை, சரிதாவின் கார்டை இயந்திரத்தில் செலுத்தி 28,500 ரூபாய் எடுத்தது தெரிந்தது.
சரிதா கொடுத்த புகாரின்பேரில் திருத்தணிபோலீசார் வழக்கு பதிந்துவிசாரித்து வருகின்றனர்.