ADDED : செப் 25, 2024 07:47 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மப்பேடு:கடம்பத்துார் ஒன்றியம் மப்பேடு அடுத்துள்ளது, தொடுகாடு ஊராட்சி. இங்குள்ள பராசங்குபுரம் பகுதியில் பொன்னியம்மன் கோவில் உள்ளது. நேற்று காலை பகுதிவாசிகள் வந்த போது, உண்டியல் உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
தகவலறிந்து வந்த மப்பேடு போலீசாரின் விசாரணையில், உண்டியல் உடைக்கப்பட்டு 50,000 ரூபாய் திருடு போனது தெரிய வந்தது. மப்பேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.