நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் தாலுகா, ஜனாகபுரம் அடுத்த, அக்கச்சிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமன்,40; இவர், நேற்று முன்தினம், 'பல்சர்' இருசக்கர வாகனத்தில் திருத்தணி தாலுகா, மாம்பாக்கம் கிராமத்தில் உள்ள மாமியார் வீட்டிற்கு வந்தார்.
பின், வாகனத்தை வீட்டின் பின்புறத்தில் நிறுத்திவிட்டு இரவு வீட்டில் துாங்கினார். நேற்று காலை எழுந்து பார்த்த போது, இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.
அதை தொடர்ந்து ராமன் அளித்த புகாரையடுத்து, திருத்தணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.