ADDED : அக் 27, 2025 12:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி: திருத்தணி முருகன் மலைக்கோவிலில், நேற்று முன்தினம் இரவு வாலிபர் ஒருவர் இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடத்தில் சுற்றி திரிந்தார். அப்போது, மலைக்கோவிலில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த திருத்தணி போலீசார், சந்தேகத்தின் பேரில் வாலிபரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.
அதில், ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் தாலுகா வன்னியமோட்டூரைச் சேர்ந்த பவணந்தி, 25, என, தெரியவந்தது. மேலும், இருசக்கர வாகனத்தை திருட முயற்சித்ததும் தெரிய வந்தது.
மேலும் விசாரணையில், ஏற்கனவே நான்கு இருசக்கர வாகனங்களை திருடியதையும் ஒப்புக் கொண்டாwர். திருத்தணி போலீசார் பவணந்தியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

