/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
லாரி மீது பைக் மோதல் கேட்டரிங் ஊழியர் பலி
/
லாரி மீது பைக் மோதல் கேட்டரிங் ஊழியர் பலி
ADDED : அக் 27, 2025 12:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே ஏனாதிமேல்பாக்கம் கிராமத்தில் வசித்தவர் டில்லிபாபு என்ற சதீஷ்குமார், 27; கேட்டரிங் ஊழியர்.
இவர், நேற்று காலை பெருவாயல் கிராமத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் உறவினரை இறக்கிவிட்டு, பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கவரைப்பேட்டை அடுத்த பன்பாக்கம் மேம்பாலத்தில், முன்னால் சென்று கொண்டிருந்த லாரியின் மீது மோதினார். இதில், பலத்த காயமடைந்தவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிந்த கவரைப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

