/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
'டெம்போ டிராவலர்' மோதி பைக்கில் சென்றவர் காயம்
/
'டெம்போ டிராவலர்' மோதி பைக்கில் சென்றவர் காயம்
ADDED : ஆக 08, 2025 02:20 AM
மணவாளநகர்:மணவாள நகர் பகுதியில் 'ஸ்பிளண் டர்' இரு சக்கர வாகனம் மீது, டெம்போ டிராவலர் வேன் மோதிய விபத்தில், வாலிபர் படுகாய மடைந்தார்.
திருவள்ளூர் அடுத்த புதுார் பகுதியைச் சேர்ந்தவர் குமரன், 36. தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் இவர், கடந்த 21ம் தேதி, வேலைக்கு சென்று, தனது 'ஸ்பிளண்டர்' இரு சக்கர வாகனத்தில், திருவள்ளூர் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
ஒண்டிக்குப்பம் பகுதியில் வந்த போது, பின்னால் வந்த டெம்போ டிராவலர் வேன், இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் படுகாயமடைந்த குமரன், திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து, மணவாள நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

