/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சமையல் எரிவாயு மானியம் கேட்டு முற்றுகை
/
சமையல் எரிவாயு மானியம் கேட்டு முற்றுகை
ADDED : நவ 24, 2024 03:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில், 924 குடும்பங்களை சேர்ந்த, 2,688 பேர் வசித்து வருகின்றனர். அவர்கள் பயன்படுத்தி வரும் சமையல் எரிவாயுசிலிண்டர்களுக்கு மானியம் வழங்கப்பட்டுவருகிறது.
அந்த முகாமில் வசிக்கும், 110 குடும்பத்தினருக்கு மட்டும் மானியம் விடுபட்டதாக கூறப் படுகிறது.
இந்நிலையில், சமையல் எரிவாயு மானியம்கோரி முகாமை சேர்ந்த, 50 பெண்கள், நேற்று கும்மிடிப்பூண்டிதாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பின் கோரிக்கை மனுவை தாசில்தார் அலுவலகத்தில் வழங்கினர். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டதால் அனைவரும் கலைந்து சென்றனர்.