ADDED : ஆக 15, 2025 11:19 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொன்னேரி:பொன்னேரி அரசு மருத்துவமனை மற்றும் நேதாஜி சமூக நல இயக்கம் சார்பில் ரத்ததான முகாம் நடந்தது.
பொன்னேரி அரசு மருத்துவமனை மற்றும் நேதாஜி சமூக நல இயக்கம் சார்பில் நடந்த ரத்ததான முகாமில், 50க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ரத்ததானம் அளித்தனர். இதில், அரசு மருத்துவர்கள் ஐஸ்வர்யா, நிஷாந்தி, லதா ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர் பங்கேற்றனர். இதில், கடந்த 15 ஆண்டுகளாக சுதந்திர தின நாளில் ரத்ததானம் அளித்து வரும் தன்னார்வலர்கள் கவுரவிக்கப்பட்டனர்.