தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ரெண்டுல ஒண்ணு வேலை செய்யல! கொசுவையும் கட்டுப்படுத்த முடியல?

ரெண்டுல ஒண்ணு வேலை செய்யல! கொசுவையும் கட்டுப்படுத்த முடியல?

ரெண்டுல ஒண்ணு வேலை செய்யல! கொசுவையும் கட்டுப்படுத்த முடியல?


UPDATED : நவ 14, 2026 07:44 PM

ADDED : நவ 14, 2026 07:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 14, 2026 07:44 PM ADDED : நவ 14, 2026 07:44 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், கொசு மருந்து அடிக்கும் இரு இயந்திரங்களில், ஒன்று பழுதாகியுள்ளது. இதனால், 10 சதவீத பணி கூட மேற்கொள்ளவில்லை. மேலும், கொசுவையும் கட்டுப்படுத்த முடியாமல், பேரூராட்சி நிர்வாகம் திணறி வருகிறது.

கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அவற்றில் பெரும்பாலான வார்டுகளில் மழைநீர் தேங்கியுள்ளது. மேலும், குப்பை கழிவுகள் அதிகளவில் குவிந்துள்ளன.

அவற்றில் உற்பத்தியாகும் கொசுக்களால், மக்களின் சுகாதாரம் கடுமையாக பாதித்து, ஏராளமானோர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நோய் பரவலை தடுக்க கொசு மருந்து அடிக்க வேண்டும் என, அப்பகுதி மக்களும், கவுன்சிலர்களும் பேரூராட்சி நிர்வாகத்திடம் தொடர்ந்து முறையிட்டு வருகின்றனர்.

பேரூராட்சி நிர்வாகத்திடம் இரு கொசு மருந்து அடிக்கும் இயந்திரங்கள் மட்டுமே உள்ளன. அவற்றில் ஒன்று பழுதாகியுள்ளது. மற்றொன்றை தொடர்ந்து, 30 நிமிடங்கள் பயன்படுத்தினால் பழுதாகி நின்றுவிடுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கொசு மருந்து அடிக்கும் பணிகளை, 10 சதவீதம் கூட பூர்த்தி செய்ய முடியாத அவல நிலையில், கும்மிடிப்பூண்டி பேரூராட்சி நிர்வாகம் உள்ளது. கொசு ஒழிப்பு பணிகளில் ஏற்பட்டுள்ள தொய்வால், பேரூராட்சி உட்பட்ட பகுதிகளில் கொசுக்களின் உற்பத்தி நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, கொசுக்களால் ஏற்படும் நோய் பரவலை தடுத்து, மக்களின் சுகாதாரத்தை பாதுகாக்க கூடுதலாக ஐந்து கொசு மருந்து அடிக்கும் இயந்திரங்களை வாங்க வேண்டும். அதன் மூலம், கொசு ஒழிப்பு பணிகளை முழுமையாக மேற்கொள்ள வேண்டும் என, பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us