ADDED : செப் 02, 2025 12:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை, சைக்கிள் திருடிய சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
வெங்கல் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஆயிலச்சேரியை சேர்ந்த கலையரசன், 32. இவர் கடந்த 29ம் தேதி காலை தன் சைக்கிளை வீட்டின் முன் நிறுத்தி விட்டு சென்றார். மதியம் சைக்கிள் காணவில்லை.
இதுகுறித்து கலையரசன் கொடுத்த புகாரின்படி, வெங்கல் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். சந்தேகத்தின் பேரில், திருக்கண்டலம் அண்ணாநகர் மணிகண்டனை, 18 என்பவரை விசாரித்த போது அவர் சைக்கிள் திருடியதை ஒப்பு கொண்டார்.
அவர் கொடுத்த தகவல்படி குருவாயல் கிராமத்தை சேர்ந்த, 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டார். சிறுவன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கெல்லிஸ் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மணிகண்டன் கைது செய்யப்பட்டு, ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.