/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
டிராக்டர் மோதியதில் சிறுவன் உயிரிழப்பு
/
டிராக்டர் மோதியதில் சிறுவன் உயிரிழப்பு
ADDED : ஜூன் 21, 2025 10:02 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:கடம்பத்துார் அடுத்த பேரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுகன்குமார் மகன் நிதிஷ்குமார், 16. இவர், நேற்று முன்தினம் மருந்து வாங்குவதற்காக, கே.டி.எம்., பைக்கில் சென்றார். பின், வீட்டிற்கு வரும் போது, கல்லம்பேடு அருகே எதிரே வந்த டிராக்டர் மோதியது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த நிதிஷ்குமார் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். இதுகுறித்து சுகன்குமார் கொடுத்த புகாரின்படி, மப்பேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.