/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணியில் பிரம்மோத்சவம் நிறைவு
/
திருத்தணியில் பிரம்மோத்சவம் நிறைவு
ADDED : மே 10, 2025 08:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலில், சித்திரை மாத பிரம்மோத்சவம், கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை மற்றும் இரவில் உற்சவர் முருகர் வெள்ளி சூரிய பிரபை, பூத வாகனம், ஆட்டுக்கிடாய், பல்லக்குசேவை, வெள்ளி நாகம், அன்னம், வெள்ளிமயில், புலி மற்றும் யானை போன்ற வாகனங்களில் தேர்வீதியில் உலா வந்து அருள்பாலித்தார்.
கடந்த 7ம் தேதி தேர் திருவிழா, 8ம் தேதி தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது. நேற்று காலை தீர்த்தவாரியும், இரவு கொடி இறக்கத்துடன் பிரம்மோத்சவ விழா நிறைவு பெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் ஸ்ரீதர், இணை ஆணையர் ரமணி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.

