/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பிரபல ரவுடியின் அண்ணன் கஞ்சா வழக்கில் கைது
/
பிரபல ரவுடியின் அண்ணன் கஞ்சா வழக்கில் கைது
ADDED : நவ 24, 2024 03:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரும்பாக்கம், அரும்பாக்கம் காவல் எல்லையில் கஞ்சா விற்கப்படுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று, அம்பேத்கர் மைதானம் அருகில், அரும்பாக்கம் போலீசார் கண்காணித்தனர். அங்கு, ராணி அண்ணா நகரைச் சேர்ந்த ராமகிருஷ்ணன், 40, என்பவர் கஞ்சா விற்றது தெரிந்தது. அவரை பிடித்து சோதித்த போது, மூன்று கிலோ கஞ்சா இருந்தது.
இவர், சிறையிலுள்ள பிரபல ரவுடி அரும்பாக்கம் ராதாவின் அண்ணன் என தெரிந்தது. போலீசார் அவரை கைது செய்து, பின் ஜாமினில் விடுவித்தனர்.