/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கீற்றுக் கொட்டகை நிழற்குடை கூடப்பாக்கத்தில் பஸ் பயணியர் அவதி
/
கீற்றுக் கொட்டகை நிழற்குடை கூடப்பாக்கத்தில் பஸ் பயணியர் அவதி
கீற்றுக் கொட்டகை நிழற்குடை கூடப்பாக்கத்தில் பஸ் பயணியர் அவதி
கீற்றுக் கொட்டகை நிழற்குடை கூடப்பாக்கத்தில் பஸ் பயணியர் அவதி
ADDED : டிச 18, 2024 12:23 AM

கூடப்பாக்கம்:திருமழிசை - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது பூந்தமல்லி ஒன்றியத்துக்குட்பட்ட கூடப்பாக்கம் ஊராட்சி.
இங்கிருந்து, சென்னை மற்றும் திருவள்ளூருக்கு பணி நிமித்தமாக பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ -- மாணவியர் என, தினமும் 500க்கும் மேற்பட்டோர் சென்று வருகின்றனர்.
இப்பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் கீற்றுக் கொட்டகை பயணியர் நிழற்குடையை பகுதிவாசிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால், பேருந்துக்காக காத்து நிற்கும் பகுதிவாசிகள் மற்றும் மாணவ - மாணவியர் மழையிலும், வெயிலிலும் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், கூடப்பாக்கம் ஊராட்சி பகுதியில் ஆய்வு செய்து நெடுஞ்சாலையோரம் நிரந்தர பயணியர் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் மற்றும் மாணவ - மாணவியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.