/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நம்மாழ்வார் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
/
நம்மாழ்வார் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : செப் 02, 2025 12:46 AM
திருவள்ளூர், சிறந்த உயிர்ம விவசாயிகளுக்கான நம்மாழ்வார் விருது பெற, விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.
திருவள்ளூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர்- பொறுப்பு, பால்ராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
தமிழகத்தில், வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில், சிறந்த உயிர்ம விவசாயிக்கான நம்மாழ்வார் விருது வழங்கப்பட்டு வருகிறது.
உயிர்ம வேளாண்மை என்பது செயற்கை ரசாயன உரம், பூச்சிக்கொல்லி ஆகியவற்றை தவிர்த்து, இயற்கையுடன் இணைந்த உயிரியல் சுழற்சி, இயற்கை மற்றும் உயிர்ம எரு பயன்படுத்துதல் வாயிலாக, பயிர் பாதுகாப்பு மற்றும் பயிர் சாகுபடி செய்யப்படுவதோடு மண் வளத்தையும் பாதுகாப்பது ஆகும்.
இத்திட்டத்தில் வெற்றி பெரும் மூன்று விவசாயிகளுக்கு தமிழக அரசால், நம்மாழ்வார் பெயரில் விருது வழங்கப்படும். விருதுடன் ரொக்கப்பரிசு 2 லட்சம் ரூபாய் மற்றும் பதக்கம் குடியரசு தினத்தன்று முதல்வரால் வழங்கப்படும்.
விருது பெற விரும்பும் விவசாயிகள், 'அக்ரிஸ்நெட்' இணையதளத்தில், வரும் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பதிவுக் கட்டணம் ரூபாய் 100. இது தொடர்பான தகவலுக்கு அருகில் உள்ள, வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.