/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கால்வாய் பராமரிப்பு படுமோசம் ஏரிகளின் நீராதாரம் கேள்விக்குறி
/
கால்வாய் பராமரிப்பு படுமோசம் ஏரிகளின் நீராதாரம் கேள்விக்குறி
கால்வாய் பராமரிப்பு படுமோசம் ஏரிகளின் நீராதாரம் கேள்விக்குறி
கால்வாய் பராமரிப்பு படுமோசம் ஏரிகளின் நீராதாரம் கேள்விக்குறி
ADDED : ஜூன் 16, 2025 02:00 AM

பொன்னேரி:ஆரணி ஆற்றில் இருந்து மூன்று ஏரிகளுக்கு மழைநீர் செல்லும் கால்வாய் முறையாக பராமரிக்காததால், ஏரிகளின் நீராதாரம் கேள்விக்குறியாகி வருகிறது.
பொன்னேரி அடுத்த லட்சுமிபுரம் பகுதியில், ஆரணி ஆற்றின் குறுக்கே அணைக்கட்டு உள்ளது.
மழைக்காலங்களில் அணைக்கட்டு நிரம்பும்போது, ஷட்டர்கள் திறக்கப்பட்டு, கால்வாய் வழியாக காட்டூர், தத்தமஞ்சி, வேலுார் ஆகிய ஏரிகளுக்கு மழைநீர் கொண்டு செல்லப்படுகிறது.
இந்நிலையில், மழைநீர் செல்லும் கால்வாய் உரிய பராமரிப்பு இன்றி உள்ளது. கால்வாய் முழுதும் முள்செடிகள் வளர்ந்துள்ளன. ஆங்காங்கே கரைகள் சேதமடைந்து கிடக்கின்றன. ஒரு சில இடங்களில் கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டு சுருங்கி வருகிறது.
பராமரிப்பு இல்லாத இந்த கால்வாய் வழியாக, ஏரிகளுக்கு மழைநீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இதனால், நீராதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
எனவே, மழைக்காலம் துவங்கும் முன் கால்வாயை சீரமைக்கவும், அதிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், நீர்வளத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.