/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சிகரெட் பிடித்ததால் விபரீதம் கார் தீப்பற்றி எரிந்து நாசம்
/
சிகரெட் பிடித்ததால் விபரீதம் கார் தீப்பற்றி எரிந்து நாசம்
சிகரெட் பிடித்ததால் விபரீதம் கார் தீப்பற்றி எரிந்து நாசம்
சிகரெட் பிடித்ததால் விபரீதம் கார் தீப்பற்றி எரிந்து நாசம்
ADDED : செப் 07, 2025 02:09 AM

திருவாலங்காடு:மதுபோதையில் கார் ஓட்டிய ஓட்டுநர் சிகரெட் பற்ற வைத்தபோது, அதிலிருந்து வந்த தீப்பொறியால் கார் எரிந்து நாசமானது.
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் பழையனுார் யாதவா தெருவைச் சேர்ந்தவர் நாகராஜ், 43. இவர், அதே பகுதியில் டிராவல்ஸ் நடத்தி வருகிறார்.
நேற்று காலை 8:00 மணிக்கு 'மாருதி ஸ்விப்ட்' காரில், திருவாலங்காடு சென்று விட்டு வீடு திரும்பினார்.
அம்பேத்கர் நகர் அருகே வந்த போது, திடீரென கார் தீப்பற்றி எரிந்தது. ஓட்டுநர் நாகராஜ் உடனடியாக காரை விட்டு கீழே இறங்கினார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தீ அணைக்கப்பட்டது.
இதில், காரின் முன்பகுதி முழுமையாக எரிந்து நாசமானது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவாலங்காடு போலீசார் விசாரித்தனர்.
முதற்கட்ட விசாரணையில், நாகராஜ் மதுபோதையில் கார் இயக்கியதும், சிகரெட் பிடிக்க தீப்பெட்டி வாயிலாக பற்ற வைத்த போது, தீப்பொறி பரவி கார் எரிந்ததும் தெரியவந்தது. போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.