/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கார் மோதிய விபத்து வி.ஏ.ஓ., படுகாயம்
/
கார் மோதிய விபத்து வி.ஏ.ஓ., படுகாயம்
ADDED : அக் 13, 2024 01:12 AM
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் நாபளூர் கிராம வி.ஏ.ஓ., வாக இருப்பவர் சிரஞ்சீவி, 36.
இவர் கடந்த 9ம் தேதி மதியம் திருவள்ளூரில் உள்ள கலெக்டர் அலுவலகம் செல்ல நாபளூரில் இருந்து சென்னை --- திருப்பதி தேசிய நெடுஞ்சாலை வழியாக ஹோண்டா ஆக்டிவா இருசக்கர வாகனத்தில் சென்றார்.
கனகம்மாசத்திரம் அடுத்த புதுார் அருகே சென்றபோது பின்னால் வந்த சான்ட்ரோ கார் இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில் சிரஞ்சீவி சாலையில் துாக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்தார்.
அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் அவரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் வாயிலாக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வழக்கு பதிந்த கனகம்மாசத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.