/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலை மறியலில் ஈடுபட்ட 100 பேர் மீது வழக்கு பதிவு
/
சாலை மறியலில் ஈடுபட்ட 100 பேர் மீது வழக்கு பதிவு
ADDED : ஜன 07, 2025 08:48 PM
பள்ளிப்பட்டு:திருவள்ளூர் மாவட்டம், ராமச்சந்திராபுரம் ஊராட்சியை, பள்ளிப்பட்டு பேரூராட்சியுடன் இணைக்க பகுதிவாசிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பள்ளிப்பட்டு வட்டாட்சியர் அலுவலகம் எதிரே சோளிங்கர் சாலையில் நேற்றுமுன்தினம் ஏராளமான பெண்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ராமச்சந்திராபுரம் ஊராட்சியை பள்ளிப்பட்டு பேரூராட்சி உடன் இணைக்கக் கூடாது என, வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், அவர்களுடன் சமரச பேச்சு நடத்தினர். ஆனால், அதிகாரிகளின் சமரசத்தை ஏற்க மறுத்து பொதுமக்கள் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், பள்ளிப்பட்டில் இருந்து, சோளிங்கர் செல்லும் மார்க்கத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து பள்ளிப்பட்டு போலீசார், 75 பெண்கள் உட்பட 100 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.