/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தரமற்ற சாலை போட்டு முறைகேடு பொறியாளர்கள் மீது வழக்குப் பதிவு
/
தரமற்ற சாலை போட்டு முறைகேடு பொறியாளர்கள் மீது வழக்குப் பதிவு
தரமற்ற சாலை போட்டு முறைகேடு பொறியாளர்கள் மீது வழக்குப் பதிவு
தரமற்ற சாலை போட்டு முறைகேடு பொறியாளர்கள் மீது வழக்குப் பதிவு
ADDED : ஜன 09, 2025 09:56 PM
சென்னை:திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகே உள்ள, செவிட்டு பனப்பாக்கத்தில் புதிதாக சாலை போட்டதில், 24.98 லட்சம் ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தி இருப்பதாக, பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகே, செவிட்டு பனப்பாக்கத்தில், 2019 - 20ல், புதிதாக, இரண்டு கி.மீ., துாரத்திற்கு சாலை போடப்பட்டுள்ளது. இச்சாலை தரமற்ற முறையில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இச்சாலையை, திருவள்ளூர் மாவட்ட, நெடுஞ்சாலை துறை கோட்டப்பொறியாளர் ஆய்வு செய்து, தரமற்ற முறையில் சாலை போடப்பட்டு முறைகேடு நடந்து இருப்பதை கண்டறிந்தார்.
இதுகுறித்து, லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்துள்ளார். விசாரணையில், புதிய சாலை போட்டதில் முறைகேடு செய்து, அரசுக்கு, 24.98 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படுத்தி இருப்பது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக, ஊரக வளர்ச்சி துறையைச் சேர்ந்த சோழவரம் முன்னாள் உதவி பொறியாளர் பாபு, உதவி செயற்பொறியாளர் பரந்தாமன், செயற்பொறியாளர் செந்தில்குமார் மற்றும் ஒப்பந்ததாரர் சம்பத்குமார் ஆகியோர் மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

