விவசாய நிலத்தில் மாடுகளை மேய்த்தவர் மீது தாக்குதல் மூன்று பேருக்கு ‘வலை’
விவசாய நிலத்தில் மாடுகளை மேய்த்தவர் மீது தாக்குதல் மூன்று பேருக்கு ‘வலை’
ADDED : அக் 23, 2026 07:17 PM
திருத்தணி: திருத்தணி அருகே, விவசாய நிலத்தில் மாடுகளை மேய்த்ததால், வினோத், 33, என்பவரை தாக்கிய மூவரை, போலீசார் தேடி வருகின்றனர்.
திருத்தணி அடுத்த புச்சிரெட்டிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத், 33. இவர், இன்று (அக்.,23) தனக்கு சொந்தமான மூன்று மாடுகளை, அதே பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் மேய்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த சரளா என்பவர், ‘எங்கள் நிலத்தில் மாடுகளை எப்படி மேய்க்கலாம்’ என கேட்டு தகராறு செய்தார். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தொடர்ந்து, சரளா தன் மகன் ரஞ்சித், உறவினர் வெங்கடேசன் ஆகியோரை வரவழைத்தார். பின், மூன்று பேரும் சேர்ந்து, வினோத்தை கையாலும், பீர் பாட்டிலாலும் தாக்கினர்.
இதில் படுகாயமடைந்த வினோத், திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இது குறித்து, வினோத்தின் மனைவி நந்தினி கொடுத்த புகாரின்படி, திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து, சரளா, ரஞ்சித், வெங்கடேசன் ஆகிய மூவரையும் தேடி வருகின்றனர்.
