/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஏலம் எடுக்க சென்ற சென்னை நபர் பலி
/
ஏலம் எடுக்க சென்ற சென்னை நபர் பலி
ADDED : மார் 21, 2025 11:55 PM
திருத்தணி,
சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்தவர் சரவண பாண்டியன், 50. இவர், கல்குவாரிகளை ஏலம் எடுத்து நடத்தி வந்தார். இந்நிலையில், ஆந்திராவில் நடக்கும் குவாரி ஏலத்தில் பங்கேற்பதற்காக சரவண பாண்டியன், நண்பர் சந்துரு என்பவரை அழைத்துக் கொண்டு, நேற்று முன்தினம் காரில் திருத்தணிக்கு வந்தார்.
சென்னை -- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் விடுதியில் இருவரும் தங்கியுள்ளனர். நேற்று காலை விடுதி 'பார்க்கிங்'கில் சரவண பாண்டியன் மயங்கி கிடந்தார். அவரை மீட்ட சந்துரு, திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனார்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். திருத்தணி போலீசார் விசாரிக்கின்றனர்.