/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஊரக வேலை உறுதி திட்டத்தில் அரசு பள்ளிகளில் தூய்மை பணி?
/
ஊரக வேலை உறுதி திட்டத்தில் அரசு பள்ளிகளில் தூய்மை பணி?
ஊரக வேலை உறுதி திட்டத்தில் அரசு பள்ளிகளில் தூய்மை பணி?
ஊரக வேலை உறுதி திட்டத்தில் அரசு பள்ளிகளில் தூய்மை பணி?
ADDED : ஏப் 29, 2025 11:38 PM
திருவாலங்காடு,
திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர், திருத்தணி, பொன்னேரி உட்பட மூன்று கல்வி மாவட்டங்களில் அரசு துவக்கப் பள்ளி முதல் மேல்நிலை பள்ளி வரை 1,000க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, தூய்மை பணியாளர்களுக்கு ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆனால், மாதந்தோறும் ஊதியம் முறையாக வழங்கப்படுவதில்லை. பல மாதங்கள் தாமதமாகி தான், ஊதியம் வழங்கப்படுகின்றன. இதனால், சில பள்ளிகளில் துாய்மை பணியாளர்கள் அடிக்கடி பணிகளை புறக்கணித்து செல்கின்றனர்.
மேலும், குறிப்பிட்ட பணிகளை மட்டுமே செய்கின்றனர். இதனால், பள்ளியின் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. தற்போது ஆண்டு இறுதி தேர்வு முடிந்துள்ள நிலையில், விடுமுறை துவங்கியுள்ளதால், பள்ளிகளில் பராமரிப்பு பாதிக்கப்படுகிறது.
ஊராட்சி நிர்வாகத்தின் மேற்பார்வையில், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் வாரம் ஒருமுறை துாய்மை பணிகளை மேற்கொள்வதற்கும், அதற்கேற்ப பணியாளர்களை நியமிக்க ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பள்ளி மேலாண்மை குழுவினர் வலியுறுத்தியுள்ளனர்.