/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வளர்ச்சி பணிகளை பார்வையிட்ட கலெக்டர்
/
வளர்ச்சி பணிகளை பார்வையிட்ட கலெக்டர்
ADDED : மே 28, 2025 11:49 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி, திருத்தணி தாலுகாவில், கலெக்டர் பிரதாப், 'உங்களைத் தேடி, உங்கள் ஊரில்' திட்டத்தின் கீழ் வளர்ச்சி பணிகளை நேற்று ஆய்வு செய்தார்.
திருத்தணி அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில், 1.41 கோடி ரூபாயில், ஆறு வகுப்பறை கட்டடம் கட்டும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
திருத்தணி நகராட்சியில், 1.20 கோடி ரூபாயில் நகர் நலவாழ்வு மையம் கட்டும் பணிகள், தெக்களூர் பகுதியில் நபார்டு திட்டத்தில், 3.72 கோடி ரூபாயில் தார்ச்சாலை அமைக்கும் பணிகள், வீரகநல்லுார் ஊராட்சியில் நர்சரி நாற்றங்கால் பணிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகளை பார்வையிட்டார்.