/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பொன்னேரி கிளை சிறையில் கலெக்டர், நீதிபதிகள் ஆய்வு
/
பொன்னேரி கிளை சிறையில் கலெக்டர், நீதிபதிகள் ஆய்வு
ADDED : மே 03, 2025 11:18 PM
பொன்னேரி:உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி, கலெக்டர் பிரதாப் தலைமையில், முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி ஜூலியட் புஷ்பா, தலைமை குற்றவியல் நடுவர் மீனாட்சி மற்றும் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கொண்ட மாவட்ட பார்வையாளர் குழு ஆகியோர், பொன்னேரி கிளை சிறையில் ஆய்வு மேற்கொண்டனர்.
கிளைச் சிறையில் கைதிகளுக்கான குடிநீர், கழிப்பறை, சுகாதாரம், சுற்றுப்புற துாய்மை உள்ளிட்டவற்றை பார்வையிட்டனர். கைதிகளுக்கு வழங்கப்படும் உணவு சுகாதாரமான முறையில் வழங்கப்படுகிறதா என, கைதிகளிடம் கேட்டறிந்தனர்.
மருத்துவர்கள் வருகை பதிவேடு, கைதி ஒப்படைப்பு பதிவேடு, பாரா புத்தகம், சிறை பதிவேடு, ஆயுத அறை, சமையல் அறை ஆகியவை ஆய்வு செய்யப்பட்டன. சட்ட சேவை மையம், கைதிகளின் நேர்காணல் அறை, சுற்றுச்சுவர் பாதுகாப்பு, நுாலகம் உள்ளிட்டவைகளையும் குழுவினர் ஆய்வு செய்தனர்.
ஆய்வின்போது, பொன்னேரி ஆர்.டி.ஓ., கனிமொழி, பொன்னேரி போலீஸ் உதவி கமிஷனர் சங்கர், திருவள்ளூர் சார்பு நீதிபதி சதீஷ்குமார், சுகாதார பணிகள் இணை இயக்குனர் அம்பிகா சண்முகம், பொன்னேரி தாசில்தார் சோமசுந்தரம் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.