/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நீர்த்தேக்க கால்வாய் துார்வாரும் பணி விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவு
/
நீர்த்தேக்க கால்வாய் துார்வாரும் பணி விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவு
நீர்த்தேக்க கால்வாய் துார்வாரும் பணி விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவு
நீர்த்தேக்க கால்வாய் துார்வாரும் பணி விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவு
ADDED : ஆக 28, 2025 01:50 AM

திருவள்ளூர்:பூண்டி நீர்த்தேக்க நீர்வரத்து கால்வாய் துார்வாரும் பணியை, மழைக்காலத்திற்குள் விரைந்து முடிக்க, நீர்வள துறையினருக்கு திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் உத்தரவிட்டார்.
திருவள்ளூர் அடுத்த பூண்டி நீர்த்தேக்கத்திற்கு, ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரத்தில் இருந்து, கொசஸ்தலை ஆறு வழியாக, தண்ணீர் வந்தடைகிறது. மேலும், கடம்பத்துார் ஒன்றியம், கேசாவரம் அணைக்கட்டில் இருந்து கூவம் ஆற்றில் பிரிந்து வரும், கொசஸ்தலை ஆறும் பூண்டியை வந்தடைகிறது.
இதில், கூவம் ஆற்றில் துவங்கி கசவநல்லாத்துார், செஞ்சி, காரணை, ஆத்துப்பாக்கம், கைவண்டூர் வழியாக 12 கி.மீ., பயணித்து பூண்டி நீர்த்தேக்கத்தை அடைகிறது.
இந்த, கால்வாய் ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக துார்வாரப்படாமல் செடி, கொடிகள் மற்றும் துார்ந்து மோசமான நிலையில் இருந்தது. இதன் காரணமாக, வெள்ள நீர் வெளியேற்றும் திறன் வினாடிக்கு, 3,500 கன அடிக்கு பதிலாக, 50 சதவீதம் குறைந்தது.
நீர்வளத்துறையினர், கால்வாய் துார்வாரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணியை, திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் நேற்று ஆய்வு செய்தார்.
பின் கலெக்டர் கூறியதாவது:
கடம்பத்துார் - பூண்டி வரை கொசஸ்தலை ஆற்றில், 11.50 கி.மீட்டரில், 2.50 கி.மீ., துார்வாரப்பட்டுள்ளது. வரும் வடகிழக்கு பருவமழைக்கு முன், மீதமுள்ள 9 கி.மீ., துார்வாரப்படும். இதனால், நீர்வரத்து கால்வாயை சுற்றியுள்ள கிராமங்கள் வெள்ள பாதிப்பிலிருந்து பாதுகாக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.