/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பொன்னேரி நகராட்சிக்கு கமிஷனர் பொறுப்பேற்பு
/
பொன்னேரி நகராட்சிக்கு கமிஷனர் பொறுப்பேற்பு
ADDED : டிச 23, 2024 11:58 PM
பொன்னேரி,
பொன்னேரி நகராட்சி கமிஷனராக பதவி வகித்து வந்த கோபிநாத், கடந்த அக்டோபர் மாதம், எடப்பாடி நகராட்சிக்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார்.
அதை தொடர்ந்து, பொன்னேரி நகராட்சிக்கு, எஸ்.கே. புஷ்ரா, புதிய பெண் கமிஷனராக நியமிக்கப்பட்டார். இவர் டி.என்.பி.எஸ்.சி., குருப் - 2 தேர்வு வாயிலாக நேரடியாக தேர்வு செய்யப்பட்டு, பயிற்சி பணியில் இருந்ததால், திருவேற்காடு நகராட்சி கமிஷனர் தட்சணாமூர்த்தி கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார்.
இந்நிலையில், பயிற்சி முடிந்து, நேற்று, எஸ்.கே.புஷ்ரா, புதிய கமிஷனராக பதவியேற்றார். பொன்னேரி நகராட்சியின் மூன்றாவது கமிஷனராகவும், இரண்டாவது பெண் கமிஷனராகவும் இவர் பதவி ஏற்று உள்ளார். பதவியேற்ற கமிஷனருக்கு நகராட்சி தலைவர் பரிமளம் மற்றும் அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.