ADDED : அக் 23, 2026 07:08 PM
அ நிறம் | அளவு
திருவாலங்காடு: சின்னம்மாபேட்டையில், அனுமதியின்றி எம்.சாண்ட் எனும் செயற்கை மணல் கடத்திவந்த டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
திருத்தணி தாசில்தார் செந்தில்குமார், திருவாலங்காடு – தக்கோலம் நெடுஞ்சாலையில், ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, சின்னம்மாபேட்டை ஓடை உயர்மட்ட பாலம் அருகே, நம்பர் பிளேட் இன்றி, எம்.சாண்ட் எனும் செயற்கை மணல் கடத்தி வந்த டிராக்டரை நிறுத்தினார்.
அதிகாரியை கண்டதும், டிரைவர் தப்பியோடினார். டிராக்டரை சோதனை செய்த போது, உரிய அனுமதியின்றி எம்.சாண்ட் எனும் செயற்கை மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, டிராக்டரை பறிமுதல் செய்து, திருவாலங்காடு போலீசில் ஒப்படைத்தார். தாசில்தார் செந்தில்குமார் அளித்த புகாரின்படி, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
