/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
உணவுக்காக நிறுத்தும் வாகனங்களால் நெரிசல்
/
உணவுக்காக நிறுத்தும் வாகனங்களால் நெரிசல்
ADDED : ஜூன் 16, 2025 11:28 PM
கும்மிடிப்பூண்டி,கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில், 220 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்கு, தினமும் ஆயிரக்கணக்கான கனரக, இலகுரக மற்றும் இருசக்கர வாகனங்கள் வந்து செல்கின்றன.
சிப்காட் முகப்பில் தேசிய நெடுஞ்சாலையின் மேம்பாலம் உள்ளது. இதன்கீழ், வாகனங்கள் கடந்து செல்லும் பகுதியில், ஏராளமான உணவகங்கள் இயங்கி வருகின்றன.
உணவகங்களுக்கு வரும் வாகனங்கள், அப்படியே மேம்பாலத்தின்கீழ், போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தப்படுகின்றன.
இதனால், அப்பகுதியில் நெரிசல் ஏற்பட்டு, வாகன போக்குவரத்து ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படுகிறது. பரபரப்பான காலை மற்றும் மாலை நேரத்தில், இதுபோன்று ஏற்படும் போக்குவரத்து பாதிப்பால், தொழிலாளர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
எனவே, கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய வேண்டும். விதிமீறும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என, தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.