தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/மின் ஒயரை மிதித்த கட்டுமான தொழிலாளி பலி

மின் ஒயரை மிதித்த கட்டுமான தொழிலாளி பலி

மின் ஒயரை மிதித்த கட்டுமான தொழிலாளி பலி


ADDED : அக் 23, 2026 07:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 23, 2026 07:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே, மின் ஒயரை மிதித்த, பிரபு, 39, என்ற கட்டுமான தொழிலாளி, மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.

கும்மிடிப்பூண்டி அடுத்த துராபள்ளம் கிராமத்தில் வசித்தவர் பிரபு, 39. கட்டுமான தொழிலாளி. நேற்று (அக்.,22), வீட்டின் அருகே நடந்து சென்றபோது, மின் கசிவு ஏற்பட்டிருந்த மோட்டார் இணைப்புக்கான ஒயரை எதிர்பாராதவிதமாக மிதித்துள்ளார்.

அப்போது, அவர் மீது மின்சாரம் பாய்ந்து, மயங்கி விழுந்தார். அதைக் கண்ட அருகில் இருந்தோர், அவரை மீட்டு, கும்மிடிப்பூண்டி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு, பிரபுவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

வழக்கு பதிந்த ஆரம்பாக்கம் போலீசார், அவரது உடலை, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us