/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
காப்பர் பொருட்கள் லேப்டாப் திருட்டு
/
காப்பர் பொருட்கள் லேப்டாப் திருட்டு
ADDED : ஆக 29, 2025 12:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி, :கும்மிடிப்பூண்டி அருகே தனியார் தொழிற்சாலையில், 60 கிலோ காப்பர் பொருட்கள் மற்றும் லேப்டாப்பை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
கும்மிடிப்பூண்டி அருகே பில்லாக்குப்பம் கிராமத்தில், 'வி.பி., சினர்ஜிக் சொல்யூஷன்' என்ற பெயரில் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இரு நாட்களுக்கு முன், தொழிற்சாலைக்குள் நுழைந்த மர்ம நபர்கள், 60 கிலோ எடை காப்பர் பொருட்களையும், லேப்டாப் ஒன்றையும் திருடி சென்றனர்.
இதன் மதிப்பு ஒரு லட்சம் ரூபாய். இதுகுறித்து வழக்கு பதிந்த கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் விசாரித்து வருகின்றனர்.