/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தெருக்களின் ஜாதி பெயர் நீக்கம் கவுன்சிலர் கூட்டத்தில் தீர்மானம்
/
தெருக்களின் ஜாதி பெயர் நீக்கம் கவுன்சிலர் கூட்டத்தில் தீர்மானம்
தெருக்களின் ஜாதி பெயர் நீக்கம் கவுன்சிலர் கூட்டத்தில் தீர்மானம்
தெருக்களின் ஜாதி பெயர் நீக்கம் கவுன்சிலர் கூட்டத்தில் தீர்மானம்
ADDED : ஜூலை 01, 2025 09:30 PM
திருத்தணி:ஜாதி பெயர்கள் கொண்ட தெருக்களுக்கு புதிய பெயர் வைக்க, நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருத்தணி நகராட்சி அலுவலகத்தில், நகர்மன்ற கவுன்சிலர்களின் சாதாரண கூட்டம் தலைவர் சரஸ்வதி தலைமையில் நேற்று நடந்தது. ஆணையர் பாலசுப்பிரமணியம் வரவேற்றார். கூட்டத்தில் வரவு - செலவு கணக்குகள் சரிபார்க்கப்பட்டது.
தொடர்ந்து, 13.80 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் சிமென்ட் சாலைகள், மழைநீர் வடிகால்வாய் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
முருகன் கோவிலில் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள ஆடிக்கிருத்திகை மற்றும் தெப்ப திருவிழாவிற்கு வருகை தரும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு, நகராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர், சுகாதாரம் மற்றும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டும்.
நகராட்சி தெருக்களில் உள்ள ஜாதி பெயர்களை நீக்கி, புதிய பெயர் வைப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நகராட்சி அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் நகர்மன்ற கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.