/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கூட்டுக்குடிநீர் திட்ட பணிகளுக்கு நிதி விடுவிக்க கவுன்சிலர்கள் எதிர்ப்பு திருத்தணி நகராட்சி கூட்டத்தில் களேபரம்
/
கூட்டுக்குடிநீர் திட்ட பணிகளுக்கு நிதி விடுவிக்க கவுன்சிலர்கள் எதிர்ப்பு திருத்தணி நகராட்சி கூட்டத்தில் களேபரம்
கூட்டுக்குடிநீர் திட்ட பணிகளுக்கு நிதி விடுவிக்க கவுன்சிலர்கள் எதிர்ப்பு திருத்தணி நகராட்சி கூட்டத்தில் களேபரம்
கூட்டுக்குடிநீர் திட்ட பணிகளுக்கு நிதி விடுவிக்க கவுன்சிலர்கள் எதிர்ப்பு திருத்தணி நகராட்சி கூட்டத்தில் களேபரம்
ADDED : ஆக 04, 2025 11:01 PM

திருத்தணி, திருத்தணி நகராட்சி கூட்டத்தில், கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளுக்கு பில் தொகை வழங்கக் கூடாது என, ஒட்டு மொத்த கவுன்சிலர்களும் எதிர்ப்பு தெரிவித்ததால், களேபரம் ஏற்பட்டது.
திருத்தணி நகராட்சி அலுவலகத்தில், கவுன்சிலர்களின் சிறப்பு கூட்டம் நகராட்சி தலைவர் சரஸ்வதிபூபதி தலைமையில், நேற்று நடந்தது. கமிஷனர் பாலசுப்பிரமணியம், துணை தலைவர் சாமிராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், வரவு - செலவு கணக்குகள் சரிபார்க்கப்பட்டது. பின், முருகன் கோவிலில், 14 - 18ம் தேதி வரை நடைபெறும் ஆடிக்கிருத்திகை மற்றும் தெப்பத்திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
அதில், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தருவது, பாறை புறம்போக்கு, வண்டிப்பாதை, மலை புறம்போக்கு, அனாதீனம் போன்ற இடங்களில், 5 ஆண்டுகளுக்கு மேல் வீடுகள் கட்டி வசிப்போருக்கு பட்டா வழங்குவது, மழைநீர் கால்வாய் கட்டுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், தெருவோரங்களில் பகுதி நேரம், முழு நேரம், வாகனங்கள் மூலம் வியாபாரம் செய்வோர், தலையில் சுமந்து வியாபாரம் செய்வோருக்கு, புதிய கட்டணம் நிர்ணயம் செய்வதற்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து, திருத்தணி நகராட்சியில், திருப்பாற்கடலில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ள கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளுக்கு, பில் தொகை வழங்குவது குறித்து தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
அப்போது, நகராட்சியில் மொத்தமுள்ள 20 கவுன்சிலர்களில், தலைவர், துணை தலைவர் தவிர, மீதமுள்ள அனைத்து கவுன்சிலர்களும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 'கூட்டுக்குடிநீர் ஒப்பந்ததாரருக்கு பில் தொகை வழங்கக் கூடாது' என, கோஷமிட்டனர்.
மேலும், கவுன்சிலர்கள் கூறியதாவது:
கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் முழுமையாக முடிக்கப்படவில்லை. பல தெருக்களுக்கு, இன்னும் முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படுவதில்லை.
குடிநீர் குழாய்களும், ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு, சாலையில் வீணாக தண்ணீர் செல்கிறது. பெரும்பாலான வீடுகளுக்கு குடிநீர் செல்வதில்லை. வீடுகளுக்கும், கூட்டுக்குடிநீர் திட்ட ஒப்பந்ததாரர் சரியான முறையில் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதையடுத்து, நகராட்சி தலைவர் ஒப்புதலுடன், அந்த தீர்மானம் நிறுத்தி வைக்கப்பட்டது. குடிநீர் வினியோக பிரச்னையால் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.