/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நீதிமன்ற எழுத்தர் துாக்கிட்டு தற்கொலை
/
நீதிமன்ற எழுத்தர் துாக்கிட்டு தற்கொலை
ADDED : நவ 13, 2025 10:20 PM
கும்மிடிப்பூண்டி: குடும்ப பிரச்னை காரணமாக, மனவருத்தத்தில் இருந்த நீதிமன்ற பெண் எழுத்தர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டையைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் மனைவி பிரேமலதா, 50. இவர், கும்மிடிப்பூண்டி நீதிமன்றத்தில் எழுத்தராக பணிபுரிந்து வந்தார். குடும்ப பிரச்னை காரணமாக, சில நாட்களாக பிரேமலதா மனஉளைச்சலில் இருந்துள்ளார்.
பிரேமலதா வீட்டில் தனியாக இருந்தார். நீண்டநேரம் கதவு மூடியே இருப்பதை கண்டு, அருகில் வசிப்போர் சென்று பார்த்தபோது, பிரேமலதா துாக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார்.
தகவல் அறிந்து வந்த கவரைப்பேட்டை போலீசார், பிரேமலதாவின் உடலை மீட்டு, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

