/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திரூர் வேளாண் அறிவியல் நிலையத்தில் புதிய தொழில்நுட்பத்தில் பயிர் பூஸ்டர்
/
திரூர் வேளாண் அறிவியல் நிலையத்தில் புதிய தொழில்நுட்பத்தில் பயிர் பூஸ்டர்
திரூர் வேளாண் அறிவியல் நிலையத்தில் புதிய தொழில்நுட்பத்தில் பயிர் பூஸ்டர்
திரூர் வேளாண் அறிவியல் நிலையத்தில் புதிய தொழில்நுட்பத்தில் பயிர் பூஸ்டர்
ADDED : ஜூன் 02, 2025 03:33 AM

திரூர்:பிரதமரின் வேளாண் திட்டத்தின் கீழ் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் அரசு திட்டங்களை விவசாயிகளுக்கு கொண்டு சேர்க்கும் வகையில், வேளாண் பிரசார இயக்கம், கடந்த 29 - வரும் 12ம் தேதி வரை 15 நாட்கள் நடந்து வருகிறது.
திரூர் வேளாண் அறிவியல் நிலையத்தில், மூன்று விஞ்ஞானிகள் கொண்ட குழுக்கள் வாயிலாக வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை, மீன்வளம் தொடர்பான தொழில்நுட்பங்கள் குறித்த பிரசாரம், நேற்று முன்தினம் வெள்ளியூர், பிரையாங்குப்பம், புதுமாவிலங்கை உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது.
இதில், வெள்ளியூர் பகுதியில் 'டிரோன்' வாயிலாக உரம் தெளிப்பு செயல் விளக்கம் நடந்தது. கூட்டத்தில், கரீப் பருவத்தில் உயர் விளைச்சல், நெல் ரகங்கள், தோட்டக்கலை பயிர்கள், புதிய தொழில்நுட்பத்தில் பயிர் பூஸ்டர்கள், பூச்சி மேலாண்மை உட்பட பல்வேறு வேளாண் குறித்த விளக்கங்களை விஞ்ஞானிகள் விளக்கினர்.
மேலும், மத்திய - மாநில அரசின் திட்டங்களான பிரதம மந்திரி கிசான் நிதி, பசல் பீமா யோஜனா, மண்வள அட்டை, வேளாண் கட்டமைப்பு நிதி போன்றவை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
வரும் 12ம் தேதி நடைபெறும் வேளாண் விழிப்புணர்வு கூட்டத்தில் விவசாயிகள் பங்கேற்று பயன்பெற வேண்டுமென, திரூர் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் பானுமதி கேட்டுக் கொண்டுள்ளார்.