/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மின்கம்பிகள், கம்பங்கள் சேதம்: திருத்தணி நகர மக்கள் அச்சம்
/
மின்கம்பிகள், கம்பங்கள் சேதம்: திருத்தணி நகர மக்கள் அச்சம்
மின்கம்பிகள், கம்பங்கள் சேதம்: திருத்தணி நகர மக்கள் அச்சம்
மின்கம்பிகள், கம்பங்கள் சேதம்: திருத்தணி நகர மக்கள் அச்சம்
ADDED : நவ 14, 2025 10:31 PM

திருத்தணி: திருத்தணி நகராட்சி கே.கே.நகரில் பழுதடைந்த மின்கம்பம் மற்றும் மின்கம்பிகள் சேதமடைந்துள்ளதால், எந்த நேரத்திலும் மின் விபத்து ஏற்படலாம் என, அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
திருத்தணி நகராட்சி, கே.கே.நகர் மேற்கு தெருவில், 70க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு, திருத்தணி மின்வாரியம் கம்பங்கள் அமைத்து, மின்சாரம் வினியோகம் செய்து வருகிறது.
மேலும், இந்த மின்கம்பங்கள் மூலம், கே.கே.நகர் மற்றும் திருத்தணி பொதுப்பணித்துறை அலுவலகம், நீர்வளத்துறை அலுவலகம் ஆகிய பகுதிகளுக்கு மின்சாரம் செல்கிறது.
இந்நிலையில், கம்பங்கள் மற்றும் மின்கம்பிகளை முறையாக பராமரிக்காததால் சேதமடைந்துள்ளன. கே.கே.நகர் மேற்கு தெருவில் உள்ள மின்கம்பத்தின் அடிப்பகுதி சேதமடைந்து, கான்கிரீட் பூச்சு பெயர்ந்து, எலும்புக்கூடாக மாறியுள்ளது.
மேலும், மின்கம்பிகளும் சேதமடைந்து, எந்த நேரத்திலும் அறுந்து விழும் நிலையில் உள்ளது. கம்பம் மற்றும் மின்கம்பிகள் சேதமடைந்தது குறித்து, அப்பகுதி மக்கள் பலமுறை மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், மெத்தனம் காட்டி வருகின்றனர்.
தற்போது, வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், பலத்த காற்று வீசும் என்பதால் கம்பம் உடைந்து, மின்கம்பி அறுந்து விழுந்தால் உயிர்சேதம் ஏற்படும் அபாயநிலை உள்ளது.
எனவே, திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் உடனே நடவடிக்கை எடுத்து, சேதமடைந்த கம்பம் மற்றும் மின்கம்பிகளை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

