/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரேஷன் கடை கட்டடம் சேதம் நெற்குன்றம் மக்கள் தவிப்பு
/
ரேஷன் கடை கட்டடம் சேதம் நெற்குன்றம் மக்கள் தவிப்பு
ரேஷன் கடை கட்டடம் சேதம் நெற்குன்றம் மக்கள் தவிப்பு
ரேஷன் கடை கட்டடம் சேதம் நெற்குன்றம் மக்கள் தவிப்பு
ADDED : ஆக 29, 2025 12:34 AM

சோழவரம், நெற்குன்றத்தில் சேதமடைந்த ரேஷன் கடையால், கிராம மக்கள் தவித்து வருகின்றனர்.
சோழவரம் அடுத்த நெற்குன்றம் கிராமத்தில், 35 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட ரேஷன் கடை கட்டடம் சேதமடைந்து உள்ளது. இக்கட்டடம் பாழடைந்து, எப்போது வேண்டுமானலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது.
இதுகுறித்து, கடந்தாண்டு மே மாதம், நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, ரேஷன் கடை வாடகை கட்டடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இங்கு, 350 குடும்ப அட்டைதாரர்கள் பொருட்களை வாங்குகின்றனர்.
ஆனால், அங்கு நிரந்தரமாக செயல்படாமல், ஓராண்டில் மட்டும் மூன்று முறை வெவ்வேறு வாடகை கட்டங்களுக்கு ரேஷன் கடை மாறியுள்ளது.
சேதமடைந்த ரேஷன் கடை கட்டடமும், இதுவரை இடித்து அகற்றப்படாமல் உள்ளது. இதனருகே, அரசு பள்ளி, ஊராட்சி அலுவலகம், அங்கன்வாடி மையம் ஆகியவை அமைந்துள்ளன.
இதனால், பள்ளி மாணவர்கள், ஊராட்சி அலுவலகத்திற்கு வருவோரின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
எனவே, ரேஷன் கடை கட்டடத்தை இடித்துவிட்டு, புதிதாக அமைக்க சோழவரம் ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.