ADDED : ஏப் 09, 2025 10:37 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை:பெரியபாளையம் அடுத்த கொசவன்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து, 28. நேற்று முன்தினம் வேலைக்கு சென்றவர் உடல்நிலை சரியில்லாத நிலையில், மதியம் வீடு திரும்பினார். வீட்டிற்கு வந்தவுடன் திடீரென மயங்கி விழுந்தார்.
பெரியபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். பெரியபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.