/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மின்மாற்றி அமைப்பதில் தாமதம் குறைந்த மின்னழுத்தத்தால் மக்கள் தவிப்பு
/
மின்மாற்றி அமைப்பதில் தாமதம் குறைந்த மின்னழுத்தத்தால் மக்கள் தவிப்பு
மின்மாற்றி அமைப்பதில் தாமதம் குறைந்த மின்னழுத்தத்தால் மக்கள் தவிப்பு
மின்மாற்றி அமைப்பதில் தாமதம் குறைந்த மின்னழுத்தத்தால் மக்கள் தவிப்பு
ADDED : மே 16, 2025 02:45 AM

பொன்னேரி, பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட கும்மமுனிமங்கலம் பகுதியில், 300க்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன.
இப்பகுதிக்கு பொன்னேரி துணை மின்நிலையத்தில் இருந்து மின்விநியோகம் நடக்கிறது. இதற்காக பொன்னேரி - திருவொற்றியூர் மாநில நெடுஞ்சாலையில் உள்ள மின்மாற்றியில் இருந்து மின்சாரம் கொண்டு செல்லப்படுகிறது.
இந்த மின்மாற்றியில் அதிகளவிலான மின்பயனீட்டாளர்கள் இருப்பதால், அடிக்கடி பியூஸ் போவதும், குறைந்த மின்னழுத்தம் ஏற்படுவதும் தொடர்கிறது.
கும்மமுனிமங்கலம் பகுதியில் இரவு நேரங்களில், குறைந்த மின்னழுத்தம் காரணமாக மின்விசிறி உள்ளிட்டவை சரிவர இயங்காமல், குடியிருப்புவாசிகள் இரவு துாக்கத்தை தொலைத்து தவிக்கின்றனர்.
கும்மமுனிமங்கலம் பகுதிக்கு என தனி மின்மாற்றி அமைத்து தருவதாக மின்வாரியம் தெரிவித்து, அதற்கான கட்டமைப்பை அங்குள்ள கால்நடை மருத்துவமனை அருகே செய்தது.
கம்பம் பதித்து, அதில் இரும்பு தளவாடங்கள் பொருத்தப்பட்டன. அதே சமயம் மின்மாற்றி மட்டும் பொருத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளது.
இதனால் கும்மமுனிமங்கலம் பகுதியில் மின்வெட்டு மற்றும் குறைந்த மின்னழுத்தம் காரணமாக குடியிருப்புவாசிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர். மின்வாரியம் இதை சரிசெய்ய வேண்டும் என, குடியிருப்பு வாசிகள் வேண்டுகோள்விடுத்துள்னர்.