/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பண்ணுாரில் டெங்கு விழிப்புணர்வு
/
பண்ணுாரில் டெங்கு விழிப்புணர்வு
ADDED : டிச 13, 2025 06:03 AM

பண்ணுார்: பண்ணுார் பகுதியில் சுகாதார துறையினர் டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் உத்தரவுப்படி, சுகாதார துறையினர் திருவள்ளூரில் டெங்கு விழிப்புணர்வு பணி மேற்கொண்டு வருகின்றனர்.
கடம்பத்துார் ஒன்றியம், திருப்பந்தியூர் ஊராட்சி பண்ணுார் பகுதியில், நேற்று சுகாதாரத்துறை சார்பில் கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடு, வீடாக சென்று, அப்பகுதி மக்களிடம் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
வீடுகளைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளும்படியும், உரல், டயர், செடி வளர்க்கும் தொட்டிகள் போன்றவற்றில் தண்ணீர் தேங்காமல் வைத்துக் கொள்ளும்படி, மக்களுக்கு அறிவுரை வழங்கினர்.
மேலும், திறந்த நிலையில் உள்ள தண்ணீர் தொட்டிகளை ஆய்வு செய்தனர். வீடுகளில் திறந்த வெளியில் இருந்த பழைய டயர், பிளாஸ்டிக் போன்ற பழைய பொருட்களை அப்புறப்படுத்த அறிவுறுத்தினர். குடிநீரை நன்று காய்ச்சி வைத்து, குடிக்க வேண்டுமெனவும் கூறினர்.

